அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள லாபோர்ட் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் முல்லின்ஸ் (41). இவர் அங்குள்ள ஒரு கிளப்புக்கு சென்றார். அளவுக்கு மீறி மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தார்.
அங்கு ஒரு தவளை இருந்தது. அதைப் பார்த்தவுடன் அவருக்குள் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. உடனே அந்த தவளையை கையில் எடுத்து கொஞ்சினார். பின்னர் கீழே விடாமல் தொடர்ந்து முத்தமிட்டபடி ஆனந்த நடனமாடினார்.
இதற்கிடையே அவரது கையில் இருந்து நழுவி குதித்து ஓடிய தவளையை மீண்டும் பிடித்து முத்தமிட்டார். அவரிடம் இருந்து தப்ப முடியாமல் தவளை தவித்தது. அதை பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த போலீசார் அவரிடம் இருந்த தவளையை பறித்து விடுவித்தனர். பிறகு அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.


0 Comments