சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வனவிலங்கு ஆய்வாளர்கள் சுமார் 7 வயது பெண் பாண்டா கரடிக்கு செயற்கை முறை மூலமாக கருத்தரிப்பு சிகிச்சை அளித்தனர். கடந்த ஜனவரி மாதம் அளிக்கப்பட்ட இந்த சிகிச்சையின் பலனாக கடந்த செவ்வாய்க்கிழமை அந்த தாய் பாண்டா இரட்டை பெண் பாண்டா குட்டிகளை பிரசவித்துள்ளது.
கரடிக்கு உரிய ரோமங்கள் சரியாக வளராத நிலையில், எலி குஞ்சுப்போல் சுமார் 118 கிராம் மற்றும் 70 கிராம் எடையில் பிறந்துள்ள இந்த பாண்டா குட்டிகளை பெரியவர்களும், குழந்தைகளும் வெகு ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.
ஒரு காலத்தில் சீனா, வியட்நாம் மற்றும் மியான்மரில் பெரிய அளவிலான பாண்டா கரடிகள் ஏராளமாக வாழ்ந்து வந்துள்ளன. ஆனால், காலப்போக்கில் இவை சிறுகச்சிறுக அழிந்துப் போயின. தற்போது, உலகம் முழுவதும் வெறும் 1800 பாண்டா கரடிகள் மட்டுமே வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையை பெருக்கும் விதமாக சீன வனவிலங்கு ஆய்வாளர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இந்த குட்டிகள் பிறந்துள்ளன என்பது, குறிப்பிடத்தக்கது.






0 Comments