Subscribe Us

header ads

மஹிந்தவிற்கு ஓய்வில்லை! அடுத்த தேர்தலிலும் பங்கேற்க வாய்ப்பு


தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு இப்பொழுது ஓய்வில்லை என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க பதவி வகிப்பவர்கள் 60 வயதை அடைந்ததும் ஓய்வு பெற வேண்டும் என்பது சட்டம். இந்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்றுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணையாளராக இன்னொருவராக நியமிக்கப்படும் வரை அவர் ஓய்வு பெறமுடியாது. இந்நிலையில் ஆணைக்குழு இன்னொரு தேர்தல்கள் ஆணையாளரை நியமிக்கும் வரை மஹிந்த தேசப்பிரியவே தேர்தல்கள் ஆணையாளராக இருப்பார்.

இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்பதால் மஹிந்த தேசப்பிரியவின் வழிகாட்டலிலேயே இம்முறை பொதுத் தேர்தல் இடம்பெறும் எனக் கூறப்படுகின்றது.

நடந்து முடிந்த தேர்தலில் மஹிந்த தேசப்பிரிய சிறப்பான முயைில்  செயற்பட்டார் என்று பாராட்டுக்கள் பல பெற்றிருந்தார். தேர்தலில் கள்ள வாக்குகள் போட வருபவர்களின் நெற்றியில் சுடுங்கள் என்று அன்றே தேர்தலில் உத்தரவிட்டார். இதனால் இவர் மீதான நம்பிக்கை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலும் மிகவும் சூடான தேர்தலாக மாறியிருக்கின்ற நிலையில் மகிந்த தேசப்பிரியவின் வழி நடத்தல்கள் நியாயமான தேர்தல் நடக்க வழிவகுக்கும் என்று நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.

Post a Comment

0 Comments