இலங்கையில் பிறந்து நெதர்லாந்தைச் சேர்ந்த தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்ட பெண்ணொருவர் அவரது தாயை தேடிக் கண்டுபிடித்த சம்பவமொன்று சந்தலங்காவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தற்போது 30 வயதாகும் அப்பெண் நெதர்லாந்து நாட்டில் பொறியியலாளராக இருப்பவரென தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் எனவும் அவரும் அவரது சகோதரியும் 1985-03-04 அன்று சந்தலங்கா வைத்தியசாலையில் பிறந்ததாகவும் தெரியவருகின்றது.
நிமலாவதி என்ற அவரது தாயாரால் இரண்டு குழந்தைகளையும் சுமார் 2 1/2 மாதங்கள் வரையே வளர்க்க முடிந்துள்ளது.
பொருளாதார சிக்கலால் தவித்த அவர் அக்காலப்பகுதியில் இலங்கை வந்த நெதர்லாந்து தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளையும் தத்துக் கொடுத்துள்ளார்.
பின்னர் இருவரில் ஒருவர் அங்கு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கால ஓட்டத்தில் நெதர்லாந்து தம்பதியினர், தமது வளர்ப்பு மகளிடம் நிஜ பெற்றோர் தொடர்பில் தெரிவித்துள்ளதுடன், அவரைப் பார்த்துவிட்டு திரும்பும்படியும் கோரியுள்ளனர்.
ஆவணங்கள் சிலவற்றுடன் தனது தாயை தேடி இலங்கை வந்துள்ள அப் பெண் ஒருவாறு தனது தாயைக் கண்டு பிடித்துள்ளார்.
இதன்போது அப்பெண்ணின் தாயார் மற்றுமன்றி பிரதேசவாசிகளும் இக்காட்சியைக் கண்டு கண்ணீர் சிந்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே போன்று கடந்த வருடம், பல ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய பிரஜை தத்தெடுத்த மலையக குழந்தையும் பல வருடங்களின் பின்னர் வந்து தனது பெற்றோரை சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments