கற்பிட்டியவில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சுமார் 40 வெளிநாட்டவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கல்பிட்டிய பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் உதவியுடன், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார் இந்த தீ விபத்தினால் எந்த இறப்பும் நிகழவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாவுக்காக வந்து, குறித்த விடுதியில் தங்கியிருந்த அனைத்து வெளிநாட்டவரும் தற்போது அதேயிடத்திலுள்ள வேறொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தினால் விடுதியின் பொது கட்டடம் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் முக்கியமான சொத்துக்கள் தீக்கிரையாகாமல் பாதுக்காக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.













0 Comments