அரசியல் ரீதியாக முக்கியமற்ற விடயங்களை தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒருவர் மாறி ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதனை விடவும் நாட்டையும் மக்களையும் முதன்மைப்படுத்தி செயற்பட வேண்டியது அவசியமானது.
20ம் திருத்தச் சட்டம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அரசியல்வாதிகள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பல்வேறு கருத்துக்களை வெளியிடுவதனை விடவும் நாட்டை அபிவிருத்தி செய்வது குறித்தே அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும்.
அரசியல் அமைப்பு திருத்தங்களின் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சிலர் கோருகின்றனர். எனினும், பொருத்தமான நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது.
அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் பூரண தெளிவுடையவர்கள் மட்டுமே கருத்து வெளியிட வேண்டும். தெரியாத விடயங்கள் குறித்து எல்லோரும் பேசக்கூடாது.
நாட்டில் சர்ச்சைக்குரிய நிலைமையை ஏற்படுத்தாது நாட்டினதும், மக்களினதும் நலனை முதன்மையாகக் கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டியது அவசியமானது என கலகம ஸ்ரீ அத்தாமஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், நேற்று அஸ்கிரி பீடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட போது இந்தக் கருத்துக்களை அஸ்கிரி பீடாதிபதி வெளியிட்டுள்ளார்.


0 Comments