”எப்போ பாத்தாலும் டிவி... அந்த டி.வியப் போட்டு உடைக்க போறேன் பாரு....” தேர்வு நேரங்களில் அப்பாக்களின் இந்த கோப வார்த்தைகளைக் கேட்காதவர்கள் நம்மில் குறைவு. ஆனால் இன்னொரு டி.வி வாங்குவதை யோசித்தோ என்னவோ பல பெற்றோர்கள் இதை வெறும் வார்த்தைகளோடே நிறுத்திக் கொண்டார்கள்.
இதே போல், தன் மகன் சரியாக படிக்காததால் ஆவேசமடைந்த ஒரு அப்பா, அவன் எப்போதும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் Xbox எனப்படும் வீடியோ கேம் பிளேயரை அவர் உடைத்தால் கை வலிக்கும் என்று அவரது மகனையே உடைக்க வைத்துள்ளார். இந்த அரிய காட்சியை அவர் வீடியோவாக எடுக்க, யூ-டியூபில் அந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. அந்த சிறுவனுக்கும் அப்பாவுக்கும் ஆதரவாக பலர் யூ-டியூபில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


0 Comments