அரச உத்தியோகத்தர்களுக்கான ஒழுக்க விழுமியங்கள் இன்று (21)
அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் சுதேச விவகார அமைச்சு
தெரிவிக்கின்றது.
ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான சுற்றுநிருபம் இன்று (21) வெளியிடப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜி. தடல்லகே குறிப்பிட்டார்.
இது தொடர்பான தகவல்களை பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், இந்த ஒழுக்க விழுமியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜி. தடல்லகே மேலும் கூறினார்.


0 Comments