அல்கொய்தா போராளிகள் இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே
மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த 'நேவி சீல்' என்கிற
சிறப்புப்படை மேற்கொண்டது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஒசாமாவின்
பிரேதத்தை கடலில் புதைத்து விட்டதாக அமெரிக்க அரசு அறிவித்தது.
இந்நிலையில், ஒசாமாவின் அபோடாபாத் நகர வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட
ரகசிய ஆவணங்களை அமெரிக்கா இன்று வெளியிட்டுள்ளது. தனது சகாக்களுக்கு ஒசாமா
அனுப்பிய கடிதங்கள் மற்றும் இமெயில்களில் கோஷ்டி மோதல்களை கைவிட்டு,
அமெரிக்காவை நிலைகுலைய வைக்கும் வகையில் அதிரடி தாக்குதல்களை நடத்துமாறு
அறிவுறுத்தியிருந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அமெரிக்க மந்திரிகள் மற்றும் அரசின் முக்கிய உயரதிகாரிகளை ஆளில்லா
விமான தாக்குதல் மூலம் தீர்த்துக்கட்டுமாறு ஒசாமா உத்தரவிட்டிருந்த
ரகசியமும் இந்த ஆவணங்களின் வாயிலாக வெளியாகியுள்ளது.


0 Comments