Subscribe Us

header ads

முகத்திரை அணிவதற்கு எதிரான மேன்முறையீட்டை உறுதிப்படுத்தியது மனித உரிமைகளுக்கான நீதிமன்றம்

பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மேன்முறையீட்டை ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

மத சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை இந்த தடை மீறுவதாக தெரிவித்து பிரான்ஸை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்திருந்தார்.

எனினும், மேன்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் குழாம் இந்தத் தடை மத ரீதியானது அல்லவெனவும், முகம் மறைக்கப்படுவதனாலேயே இந்த தடையை விதித்துள்ளதாகவும் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு இறுதியானது எனவும், இதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதற்கு எதிரான தடை 2010 ஆம் ஆண்டு நிக்கோலஸ் சார்க்கோஸியின் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் முழு முகத்தினையும் மூடும் வகையில் பொது இடங்களில் முகத்திரை அணிபவருக்கு 150 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டதோடு, இந்தத் தடையை மீறும்  பெண்கள் பிரான்ஸ் குடியுரிமை தொடர்பில் மீண்டும் கற்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

முழு முகத்திரை என்பது பிரான்ஸ் பின்பற்றுகின்ற மத சார்பற்ற தன்மையை மீறுவதாக அமைவதாகவும், அதனை அணியும் நபரின் முழு முகமும் மறைக்கப்படுவதால், பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் பிரான்ஸ் அரசாங்கம் குறிப்பிடுகின்றது.

பிரான்ஸை தொடர்ந்து பெல்ஜியத்திலும் 2011 ஆம் ஆண்டு முகத்திரை அணிவது தடை செய்யப்பட்டது.

அத்துடன், ஸ்பெயினின் பார்சிலோனா உள்ளிட்ட சில நகரங்களிலும், இத்தாலியின் சில நகரங்களிலும் முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: news1st

Post a Comment

0 Comments