Subscribe Us

header ads

ஏறாவூரில் ஆபத்தான நிலையில் மின்சார சபையின் மின்மாற்றி (PHOTOS)

அபு அலா - 


ஏறாவூரில் பொது மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் மின்மாற்றி ஒன்று கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் காரியாலயத்திற்கு அருகில் ஒரு ஆபாத்தான நிலையில் காணப்படுகின்றது 

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்துக்கு அருகில் இது காணப்படுவதாகவும் இது கடந்த சில மாதங்களாக இந்த மின்மாற்றி மிக ஆபத்தான நிலைமையிலேயே காணப்படுவதாகவும், அதிகமான பொது மக்கள் முதலமைச்சரின் காரியாலயத்துக்கு வருவதை குறிப்பிட்டு பிரதேச இலங்கை மின்சார சபையின் காரியாலயத்துக்கு தெரிவித்தும் கூட இவ்விடயம் தொடர்பில் எந்த நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது 6 அடி உயர்த்தில் இருக்கும் இந்த மின்மாற்றிக்கு பக்கத்தில் பிரதான விதியிலிருந்து உள்வீதிக்கு செல்லும் பாதை ஒன்றும் அமையப்பெற்றுள்ளது. இந்த வீதியால் பாடசாலை மாணவர்கள் அதிகம் சென்று வருகின்றனர். 

இவ்விதியால் பாடசாலை மாணவர்கள் செல்வதற்கு அச்சம் கொண்டு மற்று வீதியால் சென்று வருவதாகவும் இதனால் பெற்றோர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே குறிப்பிட்ட விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் ஏறாவூர் காரியாலயம் இதனை உடனடியாக கவனத்திற்கொண்டு இந்த மின்மாற்றி பெட்டியை ஆபத்து நிகழும் முன் மாற்றியமைக்க முன்வரவேண்டும்.






Post a Comment

0 Comments