Subscribe Us

header ads

புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரி மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. (PHOTOS)

அபு அலா -


தொடர்ந்து மலையகத்தில் காணப்படும் சீரற்ற காலநிலையில் புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரி மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. 

குறித்த கல்லூரியின் மைதானத்தில் இடி மின்னளுடன் மழை பெய்த வேலையில் சுமார் 25 அடி ஆழமான குழி ஒன்று உருவாகியுள்ளது. இதன் எதிர்ரொலியாக பாடசாலை கட்டிடங்களில் சிறு சிறு வெடிப்புக்கள் ஏற்பட்டு;ள்;ளதுடன் மாணவர்கள் அச்சத்துடன்  கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலைமை தொடர்பாக, கிராமசேவகர் ஊடாக உடபளாத்த பிரதேச செயளாலருக்கும் அனர்த்த முகாமைத்து நிலையத்திற்கும் அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட இடத்தை பரிசோதனை செய்து வருகின்றனர்.

மைதானம் பாதிப்புக்குள்ளாததினால் மாகாண மட்டத்தில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளுக்கு செல்லும் மணவர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலையும் தோன்றியுள்ளது. 

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு பாடசாலை நிர்வாகம் கேட்டுக் கொள்கின்றது.





Post a Comment

0 Comments