- அபூ அஸ்ஜத் -
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறுபட்ட திருகுதாளங்களை கண்டு கொள்பவர்களும் உண்டு கண்டும் கானதவர்கள் போல் செல்பவர்களும் இல்லாமல் இல்லை.சிலர் தமது அரசியல் தலைமைத்துவங்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் தேர்தல் காலங்களில் மட்டும் மக்கள் மத்தியில் மின்னிச் செல்வார்கள்.சிலர் என்றும் இந்த மக்களின் சேவகர்களாக பணியாற்றுவார்கள்.
இப்படிப்பட்ட பணிகளை செய்யக் கூடியவர்கள் ஒரு சிலராக இருந்தாலும் அவர்கள் எடுக்கின்ற முயற்சி அபரிமிதமானது பாராட்டுக்குரியது.அண்மையக் காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பு சம்பவங்கள் மத நிந்தனைகள் உள்ளிட்ட இன்னோரன்ன எத்தனையோ சம்பவங்களின் போது நீதிமன்றில் தோன்றி இந்த சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நீதி கோறியமை தொடர்பில் செய்திகளை வாசிக்க முடிந்தது.
கற்றவர்கள் சிலர் ஒன்றினைந்து ஆரம்பித்த அமைப்பான துரித தீர்வுக்கான அமைப்பு (Rapid Response Team) முன் வந்து இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் பல்வேறு காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ளதை அதனது தலைவர் சட்டத்தரணி சிராஸ் நுார்தீன் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தம்புள்ள முதல் நாட்டின் அண்மைய வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வரை இடம் பெற்றுவரும் கடும் போக்கு பிரசாரங்களுக்கு எதிராக சட்ட மற்றும் சமூக விழிப்புணர்வு செயற்பாடுகளை இந்த அமைப்பு செய்துவந்துள்ளதை நாம் நினைவுபடுத்த வேண்டும்.
தற்போ பேசப்படும் விடயமான வில்பத்து காட்டு விவகாரம் தொடர்பில் உடனடி தீர்வுக்கான அணியினர் அண்மையில் புத்தளம் மாவட்டத்தின் பூக்குளம் முதல் மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை வரையுள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்து அமக்களுடன் கலந்துரையாடியதுடன்,வரலாற்று பதிவுகளை கொண்ட பல்வேறு ஆவணங்களையும் திரட்டியுள்ளனர்.
அதே வேளை இவர்கள் அந்த பிரதேசத்தின் அரச அதிகாரிகளை சந்தித்து ஆவணங்களையும் சேகரித்துள்ளனர்.1929 ஆம் ஆண்டு காணப்பட்ட உறுதிபத்திரங்கள் மற்றும் இந்த மக்கள் வணக்கத்துக்க பயன்படுத்தி பள்ளிவாசல்கள்,ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்ட மையவாடிகள் என்பன சான்றுகளாக உள்ளதுடன்,மரைக்கார் தீவு என்னும் முஸ்லிம் கிராமங்களின் பெயர்களும் பதிவில் உள்ள விடயத்தையும் இங்கு அந்த அணியினர் சுட்டிக்காட்டி இந்த மறிச்சுக்கட்டி முதல் உள்ள கிராமங்களில் முஸ்லிம்கள் ஏற்கனவே 1990 ஆண்டுக்கு முன்பிருந்து குடியமர்ந்துள்ளார்கள் என்பதற்பகான ஆதாரங்களையும் இந்த உடனடி தீர்வுக்கான அணி பெற்றுள்ளது.
இந்த வகையில் உடடின தீர்வுக்கான அணியினர் இது தொடர்பாக கொழும்பில் புத்தி ஜீவிகள்,துறைசாந்தவர்கள்,ஊடகவி யலாளர் என பல தரப்பினரையும் ஓரிடத்தில் ஒன்று கூட்டி தமது கள விஜயத்தின் போது கண்டதையும்,பெற்றதையும் சமர்ப்பித்துள்ளனர்.
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக வரும் சவால்களை தடுப்பதற்கு தேவையான வரைபுகளையும்,ஆலோசனைகளையும் புத்தி ஜீவிகளும்,துறைசார்ந்தவர்களும் இந்த கூட்டத்தின் போது முன் வைத்துள்ளனர்.இதனை நெறிப்படுத்தி இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக வரும் சவால்களை சந்திக்கும் பொறி முறைக்கு அமைவாக அனைத்து அமைப்புக்கள் மற்றும் சமூகத்தின் துறைசார் நிபுணர்களை ஒன்று திரட்டி நிதிக்கும்,நேர்மைக்குமான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராகிவருகின்றனர்.
இந்த அமைப்பு எந்த சமூகத்திற்கு எதிரானதோ அல்லது அரசியல் கட்சிகளுக்கு இசைந்து செயற்படும் அமைப்பு ஒன்றல்ல மாற்றமாக முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம், உரிமை ,பாதுகாப்பு ,இருப்பு தொடர்பில் அனைத்து மக்களின் இனக்கப்பாட்டுடன் பயணிக்கும் அமைப்பு தான் துரித தீர்வுக்கான அணி (Rapid Response Team)
கொழும்பு மெரிடியன் ஹோட்டலில் நேற்று இடம் பெற்ற இந்த கலந்துரையாடலின் போது கலந்து கொண்டு கருத்துரைத்த வர்களை படங்களில் காணலாம்.
-Irshath Rahmathullah-





1 Comments
Rights must be given righteousness.
ReplyDeleteIt's not a single person Rishard (minister) is after, but also many intellectuals together. Presidents Yahapàlanaya :-D