தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவியை விளக்கமறியலில் வைப்பதை தடுப்பதற்காக போலி மருத்துவ சான்றிதழ் வழங்கிய வைத்தியர் ஆனந்த சமரக்கோனுக்கு எதிராக இரகசிய பொலிஸ் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சஷீ வீரவன்சவை கைது செய்யாமல் தடுப்பதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்தியராக செயற்பட்ட வைத்தியர் ஆனந்த சமரகோன் அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.
அவ்வாறு அறிவுரை வழங்கிய வைத்தியர் ஆனந்த சமரகோன் இல்லாத ஒரு நோயினை இருப்பது போல் போலியான வைத்திய சான்றிதழ் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்தை ஏமாற்றுதல் மற்றும் சட்டகொள்கைக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் வைத்தியர் ஆனந்த சமரகோனுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள குற்றப்புலனாய்வுத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments