பேஸ்புக் சமூக வலைத்தளத்திலிருந்து பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் அந்த அமைப்பின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. பேஸ்புக் சமூக வலைத்தளமே பொதுபலசேனாமற்றும் அதன் செயலாளரின் பிரதான பிரசார இயந்திரமாக இருந்து வந்துள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் பல வாசகர்கள், மேற்படி அமைப்பு மற்றும் அதன் செயலாளரின் கணக்குகளில் வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் உரைகள் வெளியிடப்படுவதாக செய்த முறைப்பாட்டை அடுத்து அந்த இரண்டு கணக்குகளையும் நீக்க பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.


0 Comments