Subscribe Us

header ads

ஷூமாக்கரின் விமானத்தை 250 கோடி ரூபாய்க்கு விற்கும் மனைவி (படங்கள் இணைப்பு)



ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல பார்முலா ஒன் கார்பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கர் கடந்த 2013-ம் ஆண்டு ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது, அங்குள்ள பாறை மீது அவரது தலை மோதி பலத்த காயமடைந்தார். இந்த விபத்தால் சுமார் 6 மாதம் சுயநினைவை இழந்திருந்த ஷூமாக்கர் தற்போது கோமாவில் இருந்து வெளிவந்தாலும், பேசவும் அசையவும் முடியாமல், 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் சுவிட்சர்லாந்தில் இருக்கிறார். 

இந்நிலையில், ஷூமாக்கர் பயன்படுத்தி வந்த ஹெட் விமானத்தை அவரது மனைவி கொரினா 25 மில்லியன் பவுண்ட்களுக்கு (சுமார் 250 கோடி ரூபாய்) விற்க முடிவு செய்துள்ளதாக ஜெர்மன் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விமானம் தவிர பிரான்சில் உள்ள தங்கள் வீட்டையும் அவர் விற்பது குறித்து யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நார்வேயில் உள்ள சுற்றுலா வீட்டை இந்த வருட தொடக்கத்தில் கொரினா விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. -MM-


Post a Comment

0 Comments