அண்மையில் கத்தாரில் வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்கி இருக்கும் விடுதி ஒன்று முற்றிலும் தீக்கிரையான ஒரு செய்தியை நீங்கள் ஊடகங்களில் பார்த்து இருப்பீர்கள்.
குறித்த சம்பவத்தில் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது இலங்கை தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் “எல்லாம் இலவசம்” என்று ஆசை காட்டி அனுப்பப்படும் அதிகமான இலங்கைதொழிலாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வந்து மிகப் பெரிய போராட்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
முகவர்கள் ஊடாக மத்திய கிழக்கு தொழிலுக்கு வருபவர்கள் தொழில், நிறுவனம்,ஊதியம்,வேலை நேரம், மருத்துவம்,விடுமுறை, தங்குமிடம், உணவு, இந்த மாதிரி அடிப்படை விடயங்களை முகவிரிடமிருந்தோ, குறித்த வெளிநாட்டு நிறுவனத்திட மிருந்தோ எழுத்து மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
“எல்லாம் இலவசம்” “பாஸ்போார்ட் கொபி மட்டும் இருந்தால் போதும்” “ஒரு வாரத்தில் பயணம்” என்ற முகவர்களின் ரெடிமேட் பொய்களை நம்பியே அடி, நுனி தெரியாமல் இங்கே வந்து இறங்குகிறார்கள்.
முகவர்களூடாக மத்திய கிழக்கு வருபவர்கள் குறைந்தது அந்த நாடுகளில் இருக்கும் தங்களது உறவினர்கள், நண்பர்களிடமாவது குறித்த நிறுவனங்கள் பற்றிய உண்மைத் தகவல்களை கேட்டுத் தெரிந்து கொண்டு இறுதி முடிவுக்கு வரவேண்டும்.
இலங்கையின் அதிகமான வெளிநாட்டு முகவர் நிறுவனங்களுக்கும்,மத்திய கிழக்கின் அதிகமான நிறுவனங்களுக்கும் இடையில் பெரிய “டீல்கள்” இருக்கின்றன. அவற்றை சரியாக முடித்துக் கொள்ள அவர்கள் இந்த அப்பாவி தெழிலாளர்களையே பணயம் வைக்கிறார்கள்.
எனவே இந்த முகவர்களூடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு வர இருப்பவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து சரியான தகவல்களை உறுதியாக பெற்றுக் கொண்ட பிறகே இறுதி முடிவை எடுக்க வேண்டும்.
ஏன் என்றால் இங்கே தொழிலுக்கு வரும் யாரையும் யாரும் கட்டி இழுத்துக் கொண்டு வருவதில்லை. அவர்கள் விரும்பியே வருகிறார்கள்
வந்த பிறகு அழுது கொண்டு இருப்பதில் எந்த அர்த்தமுமில்லை.
0 Comments