Subscribe Us

header ads

புதிய வேன், வீடு வாங்குவதற்காக மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்த பெற்றோர் கைது


புதிய வேன் ஒன்றையும் வீடு ஒன்றை வாங்குவதற்காக தமது 12 வயதான மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி அச்சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒரு தம்பதியை மெக்ஸிகோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மெக்ஸிகோவின் வட பிராந்திய நகரான சியுடட் ஜுவா எஸை சேர்ந்த ரிக்கார்டோ நவரோ மற்றும் லொரினா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

மேற்படி சிறுமி வல்லுவறவுக்கு உட்படுத்தப்படும் காட்சிகளை அச்சிறுமியின் தாயான லொரினாவின் வீடியோவில் பதிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பாட்டியே முதலில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.


தமது நகரிலுள்ள நபரொருவர் அச்சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தப்படுவது படம் பிடிக்கப்படுவதாக அச்சிறுமியின் பாட்டியார் தெரிவித்துள்ளார்.
வீடொன்றையும் வேன் ஒன்றையும் வாங்குவதற்காக இந்த நடவடிக்கையை தாம் மேற்கொண்டதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
இவர்கள் சிறுவர் பாலியல் படங்களை தயாரிக்கும் குழுவொன்றின் அங்கத்தவர்கள் எனவும் தாம் விசாரணை நடத்துவதாகவும் மெக்ஸிகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(நன்றி மெட்ரோ நியூஸ்)

Post a Comment

0 Comments