பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக அரச ஊடக தடையை நீக்குமாறு அவ் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான நீதி, நியாயமற்ற ஊடக தடையை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், நியாயமான, சரியான ஊடக அறிக்கையிடலுக்கான சந்தர்ப்பத்தை தமக்கு வழங்குமாறும் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி விரிவுரையாளர் திலந்த விதானகே ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
''பொதுபல சேனா வலையமைப்பு'' அல்லது ''பொதுபல சேனா அரசியல் முன்னணி'' இனவாத அல்லது தீவிரவாத அமைப்புக்கள் அல்ல எனவும், பொதுபல சேனா அமைப்பினால் முன்வைக்கப்படுகின்ற தேசிய ரீதியிலான கருத்துக்களை நாட்டு மக்கள் அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தையும், உரிமையையும் அரச ஊடகங்கள் மதிப்பளிக்க வேண்டும் என பொதுபல சேனா குறித்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுபல சேனா குறித்து எந்தவொரு செய்தியையும் அரச ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை நீக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.-tw-


0 Comments