Subscribe Us

header ads

வில்­பத்து தொடர்பில் உரிய விசா­ரணை உடன் வேண்டும்


தற்­போது நிதி மோச­டிகள் தொடர்­பாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தைப்­போன்று தனிப்­பி­ரி­வொன்று அமைக்­கப்­ப ட்டு வில்­பத்து விடயம் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் மேல்­மா­காண சபை உறுப்­பினர் கே.டி.லால்­காந்த வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
அத்­துடன் மன்னார் மாவட்ட அர­சாங்க அதி­பரை நிதி மோசடி குற்­ற­வியல் பிரி­வி­னூ­டாக விசா­ரணை செய்­ய­வேண்­டு­மெ­னவும் கோரி­யுள்­ளவர் எமது நாட்டில் சுற்­றாடல் தொடர்­பாக தேசிய கொள்­கை­யொன்று நிலை­யா­ன­தாக இல்லை என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டினார்.
வனாந்­த­ரங்­களை அழிப்­பதை நிறுத்து எனும் தொனிப்­பொ­ருளில் கொழும்பில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநா ட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கொண்­ட­வாறு தெரி­வித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
வில்­பத்து விவ­கா­ரத்தை அடிப்­ப­டை­யாக கொண்டு இன­வாத ரீதியில் இவ்­வி­ட­யத்தை பூத­க­ர­மாக்கி சுயலாபம் தேடு­வ­தற்கு சில சக்­திகள் முயற்­சித்­தன. அவ்­வா­றான நிலை­மை­யொன்று ஏற்­ப­டு­மாயின் நாட்­டுக்கு மிகவும் ஆபத்­தா­ன­­தாக அமைந்­தி­ருக்கும். அதனை கருத்­தி­லெ­டுத்து நாம் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று அங்­குள்ள நிலை­மை­களை நேரில் அறிந்து கொள்­வ­தற்­காக கள விஜ­ய­மொன்றில் ஈடு­பட்டோம்.
இதன்­போது பல்­வேறு விட­யங்­களை அறிந்து கொண்டோம். அதன் பின்னர் மன் னார் அர­சாங்க அதி­கா­ரி­கள் இவ்­வி­ட­யத்­து டன் தொடர்­பு­பட்ட அமைச்சர் ஆகி­யோரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தோம்.
அரச தரப்பு அதி­கா­ரிகள் அனை­வரும் தங்­க­ளினால் எந்­த­வொரு சட்­ட­மீ­றல்­களும் ஏற்­பட வில்­லை­யென்­ப­தையே திரும்பத் திரும்ப கூறினர். இவர்கள் அனை­வ­ரு­ட னும் மேற்­கொள்­ளப்­பட்ட கருத்துப் பரி­மாற்­றத்தின் போது, கடந்த அர­சாங்க காலத்தில் அர­சியல் ரீதி­யாக சட்ட முர­ணான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. குறிப்­பாக அர­சியல் ரீதி­யான அழுத்­தத்தால் அரச அதி­கா­ரிகள் அவ்­வா­றான செயற்­பா­ட­டொன்றை மேற்­கொள்ள வேண்டி ஏற்­பட்­டி­ருக்­கலாம். எனினும் ஜன­வரி மாதம் எட்டாம் திக­திக்கு பின்னர் அந்த அரச அதி­கா­ரிகள் குறித்த விட­யத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­க­வேண்டும். அவ்­வாறு செய்­யாது தவ­றி­ழைத்து விட்­டார்கள்.
அவ்­வா­றி­ருக்­கையில் அப்­ப­கு­திக்கு விஜ யம் செய்த நாம் அங்கு பல்­லாண்டு கால­மாக காணப்­பட்ட பாரிய மரங்கள் வெட்­டப்­பட்­டுள்­ளன. அவற்றில் சில தீ மூட்­டப்­ பட்­டுள்­ளன. இன்னும் சில பாரிய இயந்­தி­ர ங்­க­ளினால் நிலத்தில் வீழ்த்­தப்­பட்­டுள்­ளதை கண்டோம்.
இவ்­வாறு வனப் பகுதி அழிக்­கப்­ப­டு­வ­தினால் எமது சந்­த­­திக்குத் தான் பாரிய ஆபத்து நேரிடும். இது குறித்து இவ்­வி­ட­யத்­துடன் தொடர்­பு­டைய அமைச்­சரைக் கேட்ட போது குறித்த பகு­தி­யி­லி­ருந்து கடந்த 1990 ஆம் ஆண்டு வெளி­யே­றி­யி­ருந்த மக்­களே மீளக் குடி­யேறி வரு­கின்­றனர். இந்த வகை யில் குறித்த பகு­தியே சுத்தம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்டார்.
ஆனால் வெட்டி அழிக்­கப்­பட்­டுள்­ள­ம­ரங்கள் அனைத்தும் 1000 வரு­டங்கள் பழைமை வாய்ந்த பெறு­ம­தி­யு­டை­ய­தா­க­வுள்­ளன. அதற்­கான ஆதாரங்கள் எம்­மிடம் உள்­ளன.
மேலும் குறித்த பகு­தியில் மக்கள் குடி­யி­ ருக்க முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின் ­றது. குறிப்­பாக அங்கு பாரி­ய­ளவில் யானை கள் வசித்து வரு­கின்­றன. அவற்­றினால் மக்­க­ளுக்கு ஆபத்து ஏற்­படும். மேலும் குடி நீர், சுகா­தார வச­திகள் காணப்­ப­ட­வில்லை.

இந்த செயற்­றிட்­டத்தின் பின்­ன­ணியில் அர­சியல் சூழ்ச்சி காணப்­ப­டு­கின்­றது. மர்­று­ பட்ட கார­ணங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. வில்­பத்து என்­பதை தாண்டி ஒட்­டு­மொத்­த­மாக இயற்கை வனந்­தா­ர­மொன்று சட்­டத்­திற்கு முர­ணாக அழிக்­கப்­பட்­டுள்­ளது.
ஆகவே, மன்னார் அரசாங்க அதிபர் உட்பட அனைத்து தரப்பினரிடமும் உரிய விசாரணைகளை அரசாங்கம் மேற் கொள்ள வேண்டும். தற்போது நூற்றுக்கு நூறு வீதமில்லாது விட்டாலும் நிதி மோசடி குற்றவியல் பிரிவினூடாக விசா ரணைகள் முன்னெடுக்கப்படுவது வரவே ற்கப்படவேண்டியதொன்றாகும். அதே போன்று சுற்றாடலுக்கு பங்கம் விளை விக்கும் இச்செயற்பாடு தொடர்பில் உரிய விசாரணைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும்.

Post a Comment

0 Comments