(கலைமகன் )
சாய்ந்தமருது மக்களினதும் விளையாட்டு வீரர்களினதும் கனவுகளில் ஒன்றாக இருந்த சாய்ந்தமருது பொதுவிளையாட்டு மைதான கனவு நேற்று மாலை நினைவானது.
பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பிட உறுப்பினருமான கௌரவ சட்டத்தரணி HM .முஹம்மத் ஹரீஸ் அவர்களின் முயற்சியால் உருவான இந்த மைதான புனரமைப்பு வேலைகள் நிறைவு பெற்றதை அடுத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ALM .சலீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பிட உறுப்பினருமான கௌரவ சட்டத்தரணி HM .முஹம்மத் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை பிரதி மேயரும் முஸ்லிம் காங்கிரசின் சிரஷ்ட பிரதிதலைவருமான கௌரவ அப்துல் மஜீத்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான முஹம்மது பிர்தவ்ஸ் ,AA வஸீர் , ஆகியோரும் மேலும் பல முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் விளையாட்டு சார் உத்தியோகஸ்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,விளையாட்டு கழகங்களின் முக்கியஸ்தர்கள்,விளையாட்டு கழகங்களின் வீரர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்விழாவில் இம்மைதான நிர்மான பணிகளுக்கு உதவியவர்களுக்கு பொன்னாடை போத்தி கௌரவிக்க பட்டது. சாய்ந்தமருது பிரதேசத்தை பிரதிநிதித்துவ படுத்தும் கழகங்களை 2 தரப்பாக பிரித்து 15 ஓவர் மட்டுபடுத்தப்பட்ட கிரிக்கட் போட்டியும் இடம்பெற்றது.





0 Comments