நான் இந்த நாட்டின் அரசன் அல்ல. மக்கள் சேவகன். மக்களுக்காக மக்களின் சேவகனாக இருந்து உச்ச அளவிலான சேவையை வழங்கவே நான் செயற்படுகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக இருந்து இந்த நாட்டிலுள்ள சகல தரப்பினருக்கும் எந்தவிதமான பிரிவுகளும் பாராமல் சேவையாற்றவே விரும்புகின்றேன்.
கட்சி, நிறம், இனம், மதம் என்ற பாகுபாடின்றி நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல எதிர்காலமொன்றை ஏற்படுத்திக் கொடுப்பது தமது எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாலை பொலன்னறுவையிலுள்ள விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்த மக்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.


0 Comments