Subscribe Us

header ads

மியன்மார் தேரர்கள் அடங்கிய குழு இலங்கை விஜயம்


மியன்மாரின் சுஜின் பீடத்தின் மகாநாயக தேரர் உட்பட, விசேட பிரதிநிதிகள் குழு வொன்று நேற்று அதிகாலை வணக்க வழிபாடுகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா மகாபோதி சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய பானுகல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பின் பேரில், இந்த விசேட தேரர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு, கடுநாயக சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கை வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மியன்மார் சுஜின் பீடத்தின் மகாநாயக அசின் ஞானஸ்ஸர தேரர் உட்பட 24 பேர் இந்த விசேட பிரதிநிதிகள் குழுவில் அடங்குகின்றனர்.
இவர்கள் ஒரு வாரம் இலங்கையில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும், இதன்போது அனுராதபுரம், கண்டி, உட்பட பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா மகாபோதி சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய பானுகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த விசேட பிரதிநிதிகள் குழுவின் வியஜத்தின் மூலம் மியன்மார் மற்றும் இலங்கைக்கு இடையிலான தற்போதைய தொடர்புகள் மேலும் வலுவாகும் எனவும் பானுகல உபதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments