தனது வீட்டை அலங்கரிக்கும் நடவடிக்கைக்காக வெட்டும் உபகரணத்தைப்
பயன்படுத்திய நபரொருவர்இ அந்த உபகரணத்திலிருந்து பாய்ந்த ஆணி
தனது தலையை ஊடுருவியிருப்பதை அறியாதிருந்த சம்பவம் சீனாவின்
ஜியாங்ஸு மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாங் யி குயி (55 வயது) என்ற மேற்படி நபர் புதுவருட தினத்தையொட்டி தனது
வீட்டை அலங்கரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதுஇ அவரால்
இயக்கப்பட்ட இயந்திரத்திலிருந்து பாய்ந்த 3 அங்குல நீளமுள்ள ஆணி
அவரது இடது கட்குழிக்கு அருகில் மண்டையோட்டை
ஊடுருவிச்சென்றதுள்ளது.
தனது மண்டையோட்டை ஆணி துளைத்துச் சென்றிருப்பதை அறியாத யாங் யி
குயிஇ கடும் சுகவீனத்துக்கு உள்ளாகிய நிலையில் நன்ஜியாங்கிலுள்ள
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட "சிரி" ஊடுகாட்டும்
பரிசோதனையின் போதே அவரது மண்டையோட்டை ஆணி ஊடுருவியிருப்பதை
மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து யாங் யி குயியின் மண்டையோட்டில் ஊடுருவியிருந்த ஆணி
அறுவைச்சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டதுடன் அவரது கண் பார்வை
பாதிப்புக்குள்ளாகாது தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments