Subscribe Us

header ads

மரண பயத்தை உணர வைக்கும் கேளிக்கை பூங்கா: சவப்பெட்டிக்குள் அடைக்கப்படும் சுற்றுலா பயணிகள் (படங்கள் இணைப்பு)


மரணத்துக்கு பின்னர் நமது உடலில் எரியூட்டும் போது ஏற்படும் வலியை முன்னரே உணரும் வகையில் சீனாவில் உள்ள ஒரு கேளிக்கை பூங்கா, வினோத ஏற்பாடு செய்துள்ளது.

சீனாவின் செங்ஷன் நகரில் உள்ளது விண்டோஸ் ஆப் தி வேல்ட் (windows of the world) என்ற கேளிக்கை பூங்காவில், பிரித்தானியாவில் உள்ள பக்கிங்கம் மாளிகை , இத்தாலியில் உள்ள ஈபில் கோபுரம் போன்றவற்றை தத்ரூபமாக அமைத்துள்ளனர்.

மேலும் வித்தியாசமான சவாரி ஒன்றை அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகிறது. 

அதன்படி சுற்றுலா பயணிகள் தங்களுக்கான பிரத்யேக சவப்பேட்டியில் அடைக்கப்படுவர்.பின்னர் கன்வெயர் பெல்ட் மூலமாக ஒரு அறைக்குள் அழைத்து செல்லப்படுவார்கள் . 

அந்த அறை முழுவதும் சூடான காற்று, தீ பிழம்புகள் என அமைக்கப்பட்டிருக்கும்.மேலும் அலறல் மற்றும் பயங்கர சத்தம் நிறைந்த அந்த அறையை விட்டு வெளியே வரும் சுற்றுலா பயணிகள் பயத்தில் வேர்வையில் நனைந்தபடி தான் வருகின்றனர். -D-



Post a Comment

0 Comments