உள்ளூராட்சி வட்டாரங்களின் எல்லைகள் மீள்நிர்ணயம் தொடர்பில்
தயாரிக்கப்பட்டுள்ள வரைவை வர்த்தமானி மூலம் பிரசுரிக்க இறுதி கட்ட
ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பொது நிர்வாக, உள்ளூராட்சி சபைகள்
அமைச்சின் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி வட்டாரங்களின் எல்லைகள்
மீள்நிர்ணய குழு தலைவர் அதன் உறுப்பினர்களை இன்று (11.5.2015) மீண்டும்
அமைச்சில் சந்தித்து, கற்பிட்டிப் பிரதேச சபைப் பிரிவுக்கு மேலும் ஆறு உறுப்பினர்கள் புதிதாக இணைத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முன்மொழிவை சமர்ப்பிக்க முடிந்ததது.
வடமேல் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம்
மாவட்ட அமைப்பாளருமான எஸ்.எச்.எம்.நியாஸ் தலைமையில் கற்பிட்டி மற்றும்
கனமூலை பிரதேச சமூக ஆர்வலர்களும் இதில் பங்கேற்றனர்.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் அமைச்சருமான எம்.டி.ஹசன் அலி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-Mohamed Muhshi-

0 Comments