தாய்லாந்து நாட்டு எல்லையை ஒட்டியுள்ள மலேசிய நிலப்பரப்பில் 100-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த எலும்புக்கூடுகள் கடத்தல்காரர்களால் கடத்தி வரப்பட்டு, கொல்லப்பட்ட மக்களுடையதா என காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாக மலேசிய உள்துறை மந்திரி அகமது ஷாகித் ஹமிது கூறியுள்ளார். அதே சமயம் எத்தனை எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்ற விவரங்களை தர அவர் மறுத்துவிட்டார். 30க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நூற்றுக்கணக்கான சடலங்கள் அனைத்தும் மியான்மர் மற்றும் வங்கதேச நாடுகளில் இருந்து அடைக்கலம் தேடி வந்தவர்களுடையதாக இருக்கலாம் என பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
பெர்லிஸ் நகரில் மட்டும் ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசாரை மேற்கோள் காட்டி அப்பத்திரிகை கூறியுள்ளது. இது முதற்கட்ட நிலவரம் தான் என்றும், அடுத்து வரும் நிலவரங்களில் சடலங்களின் எண்ணிக்கை பெருமளவு உயர வாய்ப்புள்ளதாகவும் மந்திரி ஷாகித் கூறியுள்ளார். இச்சம்பவத்தில் மலேசியர்களின் தொடர்பும் இருக்கக்கூடும் என அவர் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments