Subscribe Us

header ads

பொதுத் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன்: திஸ்ஸ அத்தநாயக்க


எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிச்சயமாக களமிறங்குவேன் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய பீடத்தில் இடம் பெற்ற சமய வழிபாடுகளில் கலந்துக்கொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

பொது தேர்தலுக்காக நான் கண்டி மாவட்டத்தை தெரிவு செய்யவுள்ளேன்.

எப்படியென்றாலும் நான் எந்த கட்சியில் போட்டியிடுவேன் என்பதனை மாத்திரம் தற்போது கூறமாட்டேன்.

எந்த கட்சி சார்பில் நான் போட்டியிட்டாலும் எனக்கு தெரியும் கண்டி மாவட்ட மக்களின் ஆதரவை என்னால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும்.

அரசியல் தலைவராக எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி.

ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுவது குறித்து தெளிவான தீர்மானம் இல்லை.

அரசியல் ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி என்னை குறித்து எவ்வாறானதொரு நிலைப்பாட்டை கொண்டிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள நான் எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன்.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் பலர் தொடர்ந்தும் என்னுடன் கதைத்துக்கொண்டு தான் உள்ளார்கள்.

இதேவேளை சாதாரணமானவர்கள், எங்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள், எங்கள் அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து எங்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

எப்படியிருப்பினும் இந்நாட்களில் காணப்படுகின்ற அரசியல் சூழ்நிலையைக் கொண்டே அரசியல் தீர்மானத்தை மேற்கொள்வேன்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் எவ்வித வைராக்கியங்களோ கோபங்களோ எனக்கு கிடையாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments