Subscribe Us

header ads

மஹிந்த ராஜபக்ஷவின் காலம் முடிவடைய போகிறது - சந்திரசேகரன்


மஹிந்த ராஜபக்ஷவின் காலம் முடிவடைய போகிறது -  சந்திரசேகரன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலம் முடிவடையப் போகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
 

இலங்கை மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களை உடனடியாக நிரந்தமாக்குமாறு கோரி இலங்கை மின்சார சபையின் தேசிய தொழிலாளர் சங்கத்தின் கிழக்கு மாகாணம் தழுவிய பொதுக்கூட்டம்மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 

இலங்கை மின்சார சபையின் தேசிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய சந்திரசேகரன் அரசாங்கம் அழியப் போகின்றது. மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கவிழப் போகின்றது என்பது இன்று நமக்கு நன்கு விளங்குகின்றது.
 

நாங்கள் அச்சப்பட வேண்டிய எந்த அவசியமுமில்லை. எதற்கும் நாம் பயப்பட வேண்டிய தேவையில்லை; அரசாங்கம்தான் இன்று அச்சப்பட்டு பயப்படுகின்றது.
 

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை தொழிலாளர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 

விசேடமாக நாட்டில் ஏற்படுகின்ற அரசியல் ரீதியான கொந்தளிப்பான சூழ்நிலைகளில் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு எப்படி  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நாங்கள் பார்க்கவேண்டும்.
 
இந்த ஆட்சியாளர்கள் ஆட்டம் காணத் தொடங்கி விட்டனர். கருணா அம்மான் அரசாங்கத்துடன் இருப்பாரா இல்லையா என நம்மால் சொல்ல முடியாது. அதனால் பயப்பட வேண்டாம்; கேட்டால் சொல்லுங்கள்; இன்னும் ஒரு மாதம்தான் உள்ளது. ஜனவரி மாதம் எட்டாம் திகதி வரைதான் உள்ளது. அதற்குப் பிறகு ஆட்டம் போட முடியாது என கூறுங்கள்.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments