மே 21, 2005-ம் திகதி முதல் வெளிவரும் 'புத்தெழில்' பத்திரிகையின் 10-ம் வருட நிறைவு விழா இன்று (09) புத்தளம் சாஹிரா
தேசியக் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.
![]() |
| சிறப்புப் பிரதியை அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் செய்தி ஆசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார் |
‘புத்தளம் மாவட்ட தமிழ் பேசும் மக்களின் இதயக்
குரல்’ என்ற மகுட வாசகத்துடன் வெளிவரும் 'புத்தெழில்' புத்தளம்
மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தின் வெளியீடாகும்.
10-ம் வருட நிறைவு விழா காலஞ்சென்ற ஊடகவியலாளர்களை
கௌரவித்து மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது. வரவேற்புரையை பத்திரிகையின் செய்தி
ஆசிரியர் கே. அஸ்மி முஹம்மத் நிகழ்த்தினார்.
வடமேல் மாகாண சபையின் உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ்,
புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ், வடமேல் மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். நவவி,
இந்து தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் மா. நாகராஜா, சாஹிரா தே.க. அதிபர்
எஸ்.ஏ.சீ. யாகுப் உட்பட அறிஞர்கள், எழுத்தாளர்கள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
![]() |
| 'கலாபூஷணம்' எஸ்.எஸ்.எம். ரபீக் |
விசேட உரையாற்றிய பத்திரிகையின் ஆலோசகர் ‘கலாபூஷணம்’
எஸ்.எஸ்.எம். ரபீக், ‘புத்தளம் பிரசேத்தில் அச்சு, ஊடகம், வாசிப்பு ஆகியவற்றில்
காணப்படும் மந்தகரமான நிலை மாற வேண்டும்’ என்றார். மேலும், ‘தனி செய்தி பத்திரிகையாக
இல்லாமல் சமூக மாற்றத்துக்கான ஆக்கங்களையும் சுமந்து வரவேண்டும்’ என்றும்
கூறினார். புத்தெழிலின் பெயரை வடிவமைத்தவரும் ரபீக் ஆவார்.
புத்தெழிலின் 10 வருட நினைவுகளை பத்திரிகையின் ஸ்தாபகர் இசட்.ஏ.எம். நமாஸ் முன்வைத்தார். பத்திரிகையின் பெயரை முன்னாள் ‘நவமணி’ ஆசிரியர் மர்ஹூம் எம்.பி.எம். அஸ்ஹர் சூட்டியதை நினைவுகூர்ந்தார். புத்தெழிலின் சேவைகளை அதில் பிரசுரமான படங்கள் சிலவற்றைக் காட்சிப்படுத்தி விளக்கினார். அதன்போது, ‘எந்தவொரு அரசியல்வாதிக்கோ, அமைப்புக்கோ இந்தப் பத்திரிகை சொந்தமானது அல்ல. இது புத்தளம் தமிழ் செய்தியாளர் சங்கத்துக்குச் சொந்தமானது’ என்றும் கூறினார்.
புத்தெழிலின் 10 வருட நினைவுகளை பத்திரிகையின் ஸ்தாபகர் இசட்.ஏ.எம். நமாஸ் முன்வைத்தார். பத்திரிகையின் பெயரை முன்னாள் ‘நவமணி’ ஆசிரியர் மர்ஹூம் எம்.பி.எம். அஸ்ஹர் சூட்டியதை நினைவுகூர்ந்தார். புத்தெழிலின் சேவைகளை அதில் பிரசுரமான படங்கள் சிலவற்றைக் காட்சிப்படுத்தி விளக்கினார். அதன்போது, ‘எந்தவொரு அரசியல்வாதிக்கோ, அமைப்புக்கோ இந்தப் பத்திரிகை சொந்தமானது அல்ல. இது புத்தளம் தமிழ் செய்தியாளர் சங்கத்துக்குச் சொந்தமானது’ என்றும் கூறினார்.
10-ம்
நிறைவு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு வெளியீட்டின் இலவச
பிரதிகள் பிரமுகர்களுக்கும் தொடராக பங்களிப்பு செய்துவருவோருக்கும்
பத்திரிகையின் ஆசிரியர் வழங்கினார்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ‘அச்சு
ஊடகங்களின் செய்தியாளர்கள் சமூகத்தை வழி நடத்துகின்றனர்; வழி நடத்தவில்லை’ என்ற
தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதன் நடுவராக புத்தளம் நகரபிதா கடமையாற்றினார்.
சாஹிரா தே.க. மாணவன் எம்.எம். அஹ்சம்
கவிதையொன்றை வாசித்தார். மாணவர்களின் கஸீதா, நடணம் ஆகியன விழாவுக்கு எழில்
சேர்த்தன. அனுசரணையாளரான Sri Lanka Telecom சார்பில் வடமேல் மாகாண
விற்பனை முகாமையாளர் எம்.ஆர்.எம். சகீன் SLT–யின் சேவைகளை
விளக்கினார். எஸ்.ஆர்.எம். இர்ஷாத் நிழச்சியை தொகுத்து வழங்கினார்.
இவ் விழாவினை
நேர் வலைபரப்பு (Live Webcast) செய்தமை பாராட்டுக்குரியது. மேலும் அன்மைக் காலமாக ஆக்க இலக்கிய வைபவங்களுக்கு பொது மக்களின் வருகை திருப்திகரமானதாக இருப்பதுவும் ஆறுதல் அளிக்கின்றது.
10 வருட காலமாக வெளிவரும் ‘புத்தெழில்’, இன்னும் பல நூறாண்டுகள் புத்தளம் மாவட்ட மக்களின் இதயக் குரலாக ஒலிக்க வேண்டுமென The
Puttalam Times
உடன் இணைந்து
Kalpitiya Voice
வாழ்த்துகின்றது.
Hisham Hussain, Puttalam
நன்றி: The
Puttalam Times
![]() |
| புத்தளம் நகரபிதா சிறப்புப் பிரதியைப் பெறும்போது. பின்னணியில் நேர் வலைபரப்புத் திரை |
![]() |
| ZAM நமாஸ் |
![]() |
| சமுகமளித்தோர் |
![]() |
| மாணவரின் கலையாக்கத் திறமைகள் |







0 Comments