நாடாளுமன்ற தேர்தலை நடாத்த மூவாயிரம் மில்லியன் ரூபா செலவாகும் என இலங்கைத் தேர்தல்கள் திணைக்களம் மதிப்பீடு செய்துள்ளது.
தபால் திணைக்களம் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றுக்கு அதிகளவு பணம் ஒதுக்கீடு செய்ய வேண்டியேற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டுமாயின் அதற்கும் 3 ஆயிரத்து 250 மில்லியன் ரூபா பணம் தேவைப்படும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில மாத கால இடைவெளியில் இரு தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதினால் 6 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா பணம் தேவைப்படும் என தேர்தல்கள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


0 Comments