Subscribe Us

header ads

லண்டனில் குமார் சங்கக்காரவுக்கு கிடைத்த கசப்பான அனுபவம்


லண்டனுக்கு சென்ற இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு கசப்பான அனுபவம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 வருடங்களாக லண்டனுக்கு வருகின்ற போதும் இந்தமுறையே இவ்வாறான நிலை ஏற்பட்டதாக குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இம்முறை குடிவரவு அதிகாரி ஒருவா், தன்னை மரியாதை குறைவான விதத்தில் நடத்தியதாக சங்கக்கார தெரிவித்துள்ளார்.
குடிவரவு அதிகாரியின் நடவடிக்கை மிகுந்த அசௌகரியத்தையும் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
அதிஸ்டவசமாக ஏனைய அனைத்து குடிவரவு அதிகாரிகளும் மிகுந்த கனிவாக நடந்து கொண்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச பயணிகளிடம் நிறத்தையோ மதத்தையோ அவர்களது புகழையோ பார்க்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல எண்ணத்துடன் நாட்டுக்கு வருவோர் நல்ல விதமாக நடத்தப்பட வேண்டியது அவசியமானது என குமார் சங்கக்கார டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
குமார் சங்கக்கார இங்கிலாந்தின் பிராந்திய அணிகளில் ஒன்றாக சர்ரே பிராந்திய அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, போட்டிகளில் விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments