அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளங்களை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாட உள்ள அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 10ம் திகதி சம்பளம் வழங்கப்பட வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் புதிய அரசாங்கத்தினால் சம்பளம் வழங்குவதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் அரசாங்கம், சுமார் 400 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரிப் பிணைப்பத்திரங்களை விநியோகம் செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவைத் தலைவர் அறிவித்ததாகவும், இன்றைய தினம் பாராளுமன்றில் இது குறித்து அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் முன்வைக்கப்பட உள்ள யோசனையை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தால், அரச ஊழியர்கள் சம்பளம் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளியல் நிபுணர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களும் இன்று கடன் பெற்றுக்கொண்டே சம்பளம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் கடன் பெற்றுக்கொள்வதாக விமர்சனம் செய்த தரப்பினருக்கு இன்று திறைசேரிப் பிணைப்பத்திரங்களை விநியோகம் செய்ய நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments