குரோத உணர்வைத் தூண்டுவோருக்கு எதிரான அரசாங்கத்தின் புதிய சட்டமானது கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை பாதிக்கக் கூடாது என சிஹல ராவய அமைப்பு அறிவித்துள்ளது.
கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் தொடர்பில் அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை பாதிக்கும் வகையில் புதிய சட்டம் அமைந்து விடக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.
இன மத முரண்பாடுகளை தூண்டும் வகையில் கருத்து வெளியிடும் தரப்பினருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த உத்தேச சட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டம் நாட்டுக்கு மிகவும் அவசியமானதல்ல என சிஹல ராவய தெரிவித்துள்ளது.
பள்ளிவாசலையோ, தேவாலாயத்தையோ அல்லது கோயிலையோ இடித்து விஹாரைகள் கட்டப்படவில்லை என தெரிவித்துள்ளது. தம்புள்ளவில் ஏழு விஹாரைகள் உடைக்கப்பட்டு பள்ளிவாசல் அமைக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.


0 Comments