ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பிற்பகல் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பில்
வாக்குகளை பெற்றுக் கொடுக்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய
செயற்குழுவினர் மேற்கொண்ட தீர்மானம் குறித்து அறிவிப்பது இதன் நோக்கம் என
தெரியவந்துள்ளது.
மேலும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் இந்த சந்திப்பில் தேர்தல் முறை
மாற்றம் குறித்த 20வது திருத்தச் சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்படும்
எனத் தெரியவருகின்றது.
இதேவேளை 19வது திருத்தச் சட்டம் குறித்து எதிர்வரும் 27 மற்றும் 28ம்
திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளதோடு, அன்று பிற்பகல்
வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.


0 Comments