முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் தற்போதைய
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த
சந்திப்பு இரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
இன்று மாலை 7 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் தனிப்பட்ட சந்திப்பு இடம்பெறவிருந்தது.
இந்த நிலையில், இருவருக்கும் இடையிலான சந்திப்பு இரத்து
செய்யப்பட்டதாகவும் மகிந்த ராஜபக்சவே இந்த சந்திப்பினை இரத்து செய்ததாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிராகவும், தனது
ஆட்சியின் போது, முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை
எடுத்து வருவதே இரத்து செய்தமைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை,
கோத்தபாய ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மகிந்த
ராஜபக்சவை ஆத்திரமூட்டியுள்ளது.
ஜனாதிபதியைச் சந்திக்க மகிந்த ராஜபக்சவுக்கு நேரமில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம முன்னர் தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளால்
தான், சந்திப்பை அவர் இரத்துச் செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார
வெல்கம தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

.png)
0 Comments