-ரூஸி சனூன் புத்தளம்-
வீடொன்றில்
திருட வந்த திருடர்கள் சிலர் அங்கு சமையலறையில் காணப்பட்ட பால்
பக்கட்டுகள் மற்றும் பிஸ்கட் வகைகளை உண்டு பருகி விட்டு நன்றி தெரிவித்து
கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் ஒன்று புத்தளம் நகரில்
இடம்பெற்றுள்ளது.புத்தளம் மரிக்கார் வீதி ஹுதா பள்ளி சந்தியில் அமைந்துள்ள
ஆசிரியை ஒருவரின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம்
இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கு
உட்புகுந்த திருடர்கள் சமையலறையில் காணப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்ட உணவு
பண்டங்களையும் திருடிசென்றுள்ளனர்.
“உங்கள் வீட்டில் காணப்பட்ட பால் பக்கட்டுகளை அருந்தியுள்ளோம். பிஸ்கட்
வகைகளை உண்டு மகிழ்ந்துள்ளோம். உங்களது கருப்பு நிற கைப்பையையும்
எடுத்துள்ளோம். எம்மை மன்னித்துக்கொள்ளுங்கள். இவ்வண்ணம், க.பொ. வ வ.” என
கள்வர்களால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் சமையலறை மேசையில்
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் நகரில் திருடர்கள் விடயத்தில் ஜாக்கிரதையாக இருக்குமாறு தெரிவித்துள்ள புத்தளம் பொலிசார், சில ஏமாற்று பேர்வழிகள் தமக்கு பள்ளியினால் வீடு கட்டி தருவதாக வாக்குறுதியளித்திருப்பதாகவும், கூரை தயாரிக்க ஆணிகள் வாங்குவதற்கு பண உதவி தருமாறும் கோரி வீடுகளுக்குள் நுழைவதாகவும், இவர்கள் விடயத்தில் அவதானமாக நடந்து கொள்வதோடு அப்படியான சந்தர்ப்பத்தில் பொலிசுக்கு உடனடி தகவல் தருமாறும் பொது மக்களை கோரியுள்ளனர்.

0 Comments