'' இது பாடசாலை விடுமுறை காலம். குடும்பம் குடும்பமாக சுற்றுலா செல்லுகின்ற
காலம். அதனையிட்டு ஒரு முக்கிய பதிவொன்றை இடலாம் என எண்ணுகிறேன்.இந்த
பதிவை பயனுள்ளது என நீங்கள் கருதினால் கூடுமானவரை பகிர்வது மட்டுமல்லாமல்
உங்களது கருத்துகளையும் பதியுங்கள். வெள்ளம் வருமுன் அணை கட்டுவது எம்
போன்றோர் மீது கடமையல்லவா?''
நான் சற்று முன்னர் ஒரு போஸ்ட்டைப் பார்த்தேன் அதில் ஒரு சகோதரி சில பிள்ளைகளுடன் 5 தூண்களுக்கு முன்னால் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அதை கண்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது காரணம் அந்த தூண்கள் முன்னால் ஜனாதிபதி சந்ரிகா குமரதுங்கவின் ஹொரகொல்லை ஜமீனில் இருக்கும் அவரது தந்தையின் சமாதி போன்றிருந்தது.அது உண்மையாக இருக்குமானால் எனது இந்த பதிவுக்கு அர்த்தமிருக்கும் என நம்புகிறேன். நான் அந்த சகோதரியையோ அவரை அப்படி நிற்க வைத்து படமெடுத்த சகோதரரையோ குறை சொல்லவில்லை. சுற்றுலா பயணங்கள் போகும் காலமிது. அதனால்னாம் செல்லும் முக்கியமான இடங்களில் நின்று போடோ பிடித்துக்கொள்ள ஆசைப்படுவது நியாயமே. ஆனால் அது எவ்வாறான இடம். அதன் முக்கியத்துவம் என்ன என்று தெரியாமல் நடந்து கொள்வது பாரிய பிரச்சினைகளுக்கு வழி வகுக்கலாம் எனபதால் எனது அனுபவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை கூறுகிறேன். நான் ஒரு மகளிர் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராக இருந்த போது மாணவர்களை அழைத்துச் சென்ற ஒரு முறை நானும் (எனது மகள் அங்கே கற்றதால்) கலந்து கொண்டிருந்தேன். எங்களது சுற்றுலா சமூகக் கல்வியோடு தொடர்பு பட்டதாக இருந்தது எனவே பௌத்த புராதண் சின்னங்கள் அதிகமாக உள்ள இடங்களை காண வேண்டி இருந்தது. அதில் '' இசுருமுனிய" விகாரையும் உள்ளடங்கியதால் அங்கு சென்றிருந்தோம். பிள்ளைகளின் கையிலும் சின்ன சின்ன கெமராக்கள். திடீரென ஒரு காட்சியை நான் காணக்கூடியதாக இருந்தது. ஒரு பெரிய வகுப்பு மாணவி பாதுகாப்பு வேலியையும் புகுந்து கொண்டு ஒரு ''பாத"" அடையாளத்தின் மேல் நின்று கொண்டு போஸ் கொடுக்க அவரது தோழி படமெடுக்க தயாராக இருந்தார். நான் மனம் பதை பதைக்க சுற்று முற்றும் பார்த்தேன் நல்ல காலம் பிக்கு மார் யாருமே அந்த இடதில் (அந்த சந்தர்ப்பத்தில்) அங்கில்லை. நான் பாய்ந்து கெமராவை பறித்தெடுத்த கையோடு அந்த இரண்டு மாணவிகளும் பரந்தோடி மற்ற மாணவிகளோடு கலந்து விட்டார்கள். நாங்கள் அந்த இசுருமுனிய விக்கரைக்குள் போகும்போதே மாணவிகளின் தலை ம்றைப்பை எடுக்காவிட்டால் போக விடமாட்டோம் என்ற அறிவித்தலைக் கண்டோம். நிச்சயமாக நான் சொன்ன காட்சியை பிக்குமாரோ, ஒரு பௌத்தனோ கண்டிருந்தால் நாங்கள் எல்லோரும் பாரிய விளைவுகளுக்கு முகம் கொடுத்திருப்போம். இதனை ஏன் சொல்ல வருகிறேனென்றால் நான் முன் சொன்ன ஹொரகொல்ல சமாதியும் அவர்கள் மலர் வைத்து வணங்கி வழிபடும் இடம். அதன் மேல் ஏறி நின்று படமெடுப்பதை அறவே விரும்ப மாட்டார்கள். எனவே இது போன்ற தேவையில்லாத சிக்கல்களை வலிந்து தேடிக்கொள்ளாது அவற்றுக்கு மதிப்பளிக்கவிட்டாலும் அந்த இடங்களின் தன்மைக்கேற்ப கவனமாக தள்ளி நின்று போட்டோக்களை பிடிப்பது நல்லது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
-Haja Sahabdeen Sir-
0 Comments