வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதியளித்த வகையில் தங்க நகைகளுக்கான
வட்டியை நீக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க
தெரிவித்தார்.
எனினும், அண்மையில் நிதி அமைச்சு அது தொடர்பில் அரச வங்கிகளுக்கு
வெளியிட்டிருந்த சுற்றுநிரூபத்தின் பிரகாரம் அந்த நிவாரணம் யாருக்குக்
கிடைக்கும் என்பதில் சிக்கல் நிலை தோன்றியிருந்தது.
கடந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச வங்கிகளிலுள்ள 2 இலட்சம் ரூபாவிற்கும் குறைவான தங்க நகைகளுக்கான வட்டியை நீக்குவதற்கு பிரேரிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தங்க நகைகளை அடகு வைத்த பலரின், நகையை மீள
திருப்புவதற்கான காலம் கடந்திருந்த போதிலும், தமக்கு சலுகைகள் கிடைக்கும்
என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் அந்த நகைகளைத் திருப்புவதைத் தாமதித்தார்கள்.
எனினும், நிதி அமைச்சின் ஊடாக அரச வங்கிகளுக்கு வெளியிடப்பட்ட
சுற்றுநிரூபத்தின் ஊடாக, அந்த சலுகைகள் தங்க நகைகளுக்கான கடனைப்பெற்ற
பலருக்கு கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது.
அது தொடர்பில் கடந்த (02) நடைபெற்ற சட்டண அரசியல் விவாத நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த சமூக சேவை மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதியளிப்பதாகவும் அரசாங்கத்
தரப்பைச் சார்ந்தவர் என்ற ரீதியில் மன்னிப்புக் கோருவதாகவும்
குறிப்பிட்டார்.


0 Comments