2022ம் ஆண்டு கத்தாரில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் அங்கு முடக்கி விடப்பட்டுள்ளன.
இதற்காக பல நாட்டுத் தொழிலாளரக்ள் இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்ற புகார்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது அறிந்ததே.
இந்த நிலையில், கின்னஸ் சாதனைக்காக ஒரு மராத்தான் போட்டி கத்தாரில் நடந்தது. அதில் பல நாட்டுத் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
தோஹாவில் நடந்த இந்த ஓட்டப் போட்டியில் தொழிலாளர்கள் செருப்பு இன்றி ஓட விடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளது.
செய்தி விபரம் : http://www.thedailybeast.com/articles/2015/04/02/slaves-to-run-shoeless-in-qatar.html
இந்தப் போட்டி எதற்காக என்று கத்தாரைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் அமைப்பு ஒன்று கறுகையில்,
எங்களது நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை கொடுமைப்படுத்துகிறோம் என்று குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் நாங்கள் தொழிலாளர்களை நல்லபடியாக நடத்துகிறோம் என்பதை நிரூபிக்கவே இந்த போட்டியை நடத்தினோம் என்றனர்.





0 Comments