சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு வல்லப்பட்டைகளை கொண்டு செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 96 இலட்சம் ரூபா பெறுமதியான 19 கிலோ 290 கிராம் வல்லப்படைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments