எதிர்க்கட்சி தலைவர் யார் எனும் விவகாரம் தற்போது பாராளுமன்றத்துக்கு புதிய விடயமாகவுள்ளது. இது குறித்து மிகக்கவனமாகவும் ஆழமாகவும் ஆராயப்படுகிறது. காலம் எடுக்கலாம் என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று சபையில் தெரிவித்தார்.
இதேவேளை, நீங்களே தீர்மானித்து ஒருவரை நியமிப்பீர்களானால் பிரச்சினை சுலபமாக தீர்ந்து விடும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து சபாநாயகர் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் யார் என்றும் அது தொடர்பான சபாநாயகரின் நிலைப்பாடு என்ன என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளின்போதே சபாநாயகர் சமல் ராஜபக் ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக் ஷ தலைமை யில் கூடியது.சபையின் பிரதான நடவடிக்கைகள் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஆகியவற்றின் நிறைவில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் பிரச்சினை எழுப்பட்டது.
குமாரவெல்கம
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பிய முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பி யுமாண குமாரவெல்கம கூறுகையில்,
எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் தொடர்பிலும் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பது குறித்தும் சபாநாயகரினால் இன்றைய தினம்(நேற்று)அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. அது தொடர்பான அறிவிப்பினை நாம் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம் என்று சபாநாயகரிடம் கோரினார்.
சபாநாயகர்
இதற்கு பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக் ஷ கூறுகையில்,எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் இப்பாராளுமன்றத்துக்கு புதிய விடயமாகும். இது தொடர்பில் மிகவும் ஆழமாக ஆராயப்பட்டு வருகின்றது என்றார்.
விமல்
இதனையடுத்து எழுந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகையில்,
பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படவுள்ளது. பிரதமரும் இதனை அறிவித்திருந்தார். அப்படியானால் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி விவகாரம் ஆராயப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அனுர
அதன் பின்னர் எழுந்த ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் அனுர குமார திசாநாயக்க கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் பதவி விவகாரம் தொடர்பில் இன்னும் ஆராயப்பட்டு வருகின்றதெனில் ஆராய்ந்து முடியும் காலம் வரையிலும் நிமல் சிறி பால டி சில்வா தான் எதிர்க்கட்சி தலைவராக இருப்பாரா என்று கேள்வியெழுப்பினார்.
சபாநாயகர்
இதற்கு பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக் ஷ கூறுகையில்,விடயம் ஆராயப்பட்டு வருகின்றது. சற்றுப்பொறுத்திருந்து பார்க்வும் வேண்டியுள்ளது அத்துடன் நீங்களே பேசி ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்து விட்டாள் பிரச்சினை தீர்ந்து விடும் என்றார்.
0 Comments