Subscribe Us

header ads

புரூனே சுல்தான்டா சும்மாவா! உலகமே வியந்து பேசுமளவு நடைபெற்ற மகனின் திருமணம் (படங்கள் / வீடியோ இணைப்பு)


உலகின் பணக்கார மனிதர்களில் ஒருவரான புரூனே சுல்தானின் இளைய மகனின் திருமணத்தை பார்த்தவர்களால் கண்ணை மூட முடியவே இல்லை, அத்தனை பிரமாண்டம். உலகின் பணக்கார மனிதர்களில் ஒருவரான புருனே சுல்தானின் இளைய மகன் இளவரசர் அப்துல் மாலிக்(31). புரூனே தலைநகரான பன்டார் செரி பெகவானில் உள்ள 1,788 அறைகள் கொண்ட அரண்மனையில் மாலிக்கின் திருமணம் பிரமாண்டமாக இல்லை இல்லை மிக மிக மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இளவரசர் மாலிக் தயாங்கு ராபியத்துல் அதாவிய்யா பென்கிரண் ஹாஜி போல்கியா(22) என்ற பெண்ணை தனது ஆடம்பர மாளிகையில் குடும்பத்தார், நண்பர்கள், ராஜ குடும்பத்தினர், வெளிநாட்டு அதிகாரிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் உடை வைரங்கள் பதித்து தங்கத்தினால் செய்யப்பட்டது ஆகும். உடை மட்டும் தான் இப்படியா என்று நினைத்தால் மணமகள் கையில் வைத்திருந்தது பூங்கொத்து அல்ல விலை உயர்ந்த கற்களால் ஆன கல்கொத்து.
மணமகள் ராபியா அணிந்திருந்த காலணிகள் பிரபல பிரான்சை சேர்ந்த டிசைனர் கிறிஸ்டியன் லோபோட்டின் வடிமைத்தது. ராபியா அணிந்திருந்த வைர நெக்லஸின் டாலர் 3 திராட்சைகளை சேர்த்தால் வரும் அளவுக்கு பெரிய மரகதம் ஆகும்.
திருமணத்தன்று மணமக்கள் மட்டும் அல்ல அந்த அரங்கில் இருந்த நாற்காலி, மேஜை, திரைச்சீலை உள்பட அனைத்தும் தங்க நிறத்தில் பார்ப்பவர்கள் கண்களை கொள்ளை கொள்ளும் அளவுக்கு ஜொலித்தது.
புருனே சுல்தானுக்கு மூன்று மனைவிகள். அவர்கள் மூலமாக அவருக்கு 5 மகன்கள் மற்றும் 7 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாலிக்கின் திருமணத்தை பற்றி தான் தற்போது பலரும் வியந்து பேசி வருகிறார்கள்.










Post a Comment

0 Comments