மஹாபொல கொடுப்பனவுத் தொகை இந்த மாதம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவுத் தொகை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏப்ரல் மாதம் தொடக்கம் கொடுப்பனவுத் தொகை 5 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தினால் தற்போதைக்கு கொடுப்பனவு தொகையை உயர்த்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இந்த கொடுப்பனவு தொகை உயர்த்தப்படும் எனவும், அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் மீறவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments