இலங்கையில் இன்று சனிக்கிழமை (04) அரை சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என்று நவீன தொழில்நுட்பம் தொடர்பிலான ஆர்தர் சி கிளார்க் மத்தியநிலையம் அறிவித்துள்ளது. இன்று மதியம் 02.31 க்கு சந்திர கிரகணம் இலங்கைக்கு தெரிய ஆரம்பிக்கும் இருப்பினும் கிரகணம் மாலை 06.20 மணிக்கே உச்சத்தை அடையும் 08.29 மணி வரை கிரகணம் தெரிய வாய்ப்புள்ளது.
06.20 – 08.29 வரை சந்திர கிரகணம் தென்பட வாய்ப்பிருப்பதால், சந்திர கிரகணத்தை தங்கள் பகுதியில் கண்ணால் பார்ப்பவர்கள் நபிவழிப்படி தொழுகை நடத்திக் கொள்ளவும்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்,
தலைமையகம்.
கிரகண தொழுகை பற்றிய சட்டங்களை www.sltj.lk <http://www.sltj.lk/> என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.


0 Comments