Subscribe Us

header ads

நோன்பு காலத்தில் சஹர், இப்தார் ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரிக்கை

கண்டி மகாவெளி தேசிய கல்வியியல் கலூரியில் 65 முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் 62 பேர் மாணவிகள் ஆகும். பாடசாலைகளில் இவர்கள் இரண்டாம் மொழி என அழைக்கப்படும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க தயார்ப்படுத்தப்படுகின்றனர்.
 அதற்கிணங்க சிங்கள பாடசாலைகளில் தமிழும், முஸ்லிம் தமிழ் பாடசாலைகளில் சிங்களமும் இவர்கள் கற்பிப்பர். அந்த வகையில் இவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆசிரிய மாணவர்களாவர் ஆகும். 
தற்போது இந்த 65 மாணவர்களும் முதலாம் இரண்டாம் வருடங்களில் விடுதிகளில் இருந்து கற்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு நோன்பு காலங்களில் இப்தார் மற்றும் சஹர் ஏற்பாடுகளை செய்து தருமாறு நோன்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் அமைப்புக்களை  அன்பாக வேண்டுகின்றனர்.
தொடர்புகளுக்கு இணைப்பாளர் மாணவன் எம்.பரீஸ் அனுராதபுர வீதி புத்தளம் 0755544206 (இவர் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் சிங்களப் பாடம் கற்பித்தவர். தற்போது மகாவலி தேசிய கல்வியியல் கல்லூரியில் ஆசிரிய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது)

-முஹ்ஷி-

Post a Comment

0 Comments