Subscribe Us

header ads

கௌரவ மனோ கணேசன் அவர்களுக்கு....


கௌரவ மனோ கணேசன் 
தலைவர் 
ஜனநாயக மக்கள் முன்னணி 
கொழும்பு
ஆராட்சிக் கட்டு பிரதேச சபைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருக்கும் உடப்பு ஆண்ண்டிமுனை வாக்காளர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுத்தல்.
புதிதாக வரையப்பட்டுள்ள உள்ளூராட்சி எல்லைகள் நிர்ணயத்தின் கீழ் தமிழ் மக்கள் வாழும் உடப்பு மற்றும் ஆண்டிமுனை மக்களுக்கு அவர்களின் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. உடப்பு கிராம சேவகர் பிரிவு (594), உடப்பு கிராம சேவகர் பிரிவு (594B) ஆண்டிமுனை(594A) ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்கும் ஒரு உறுப்பினர் மாத்திரமே தெரிவு செய்யப்பட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்மூன்று கிராம சேவகர் பிரிவுகளிலும் 5837 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்காக ஒரு உறுப்பினர் மாத்திரம் தெரிவு செய்யப்படுவது பாரிய அநீதியாகும். மூன்று உறுப்பினர்கள் இவர்களுக்காக தெரிவு செய்யப்பட வேண்டும்.குறைந்தது உடப்பு மற்றும் ஆண்டிமுனை ஆகியன தனி வட்டாரங்களாக உருவாக்கப்பட்டு இரு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க முன்வருமாறு அன்பாக வேண்டுகிறோம்.
நன்றி
Mohamed Muhusi B.A(Hons), Dip in Edu, PGDTMH(UK), Dip in Journalism, Dip in Human Rights
12, 5th Lane New settlement Road 
Puttalam

Post a Comment

0 Comments