பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தினை தோற்கடிக்க பலமான சக்திகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. யார் தடுத்தாலும் 19ஆவது திருத்தத்தினை நிறைவேற்றியாக வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள் வோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
19 ஆம் திருத்தச்சட்ட விடயத்தில் ஜனாதிபதி அமைதிகாப்பது சந்தேக்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகார மோகம் மைத்திரியையும் மாற்றிவிட்டதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதானது பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டம் இப்போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கியமான தொரு அவசியமானதும் கூட. கடந்த ஒவ்வொரு ஜனாதிபதி முறைமையில் அனைவரும் தாம் இம் முறைமையினை நீக்குவதாக வாக்கு கொடுத்துள்ளனர். ஆனால் ஒருவரும் அதை நிறைவேற்றவில்லை. அதே நிலைமையில் தான் இம் முறை மைத்திரிபால சிறிசேனவும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவதாக வாக்கு கொடுத்தே வெற்றிபெற்றார். ஆனால் இன்று வரை அது சரியாக நிறைவேற்றப்படவில்லை. ஜனாதிபதி கதிரையில் அமர்ந்த அனைவரும் செய்யததையே இவரும் செய்யப்போகின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் இம்முறை கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் 19ஐ நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம். அத்தோடு நிறைவேற்று அதிகாரம் முழுமையாக நீக்கப்பட்டு பிரதமரின் கைகளில் கொடுப்பதாகஇ இன்று சிலர் கூறுகின்றனர் இது முற்றிலும் பொய்யான தொரு கருத்து. 19வது திருத்தத்தினை நிறைவேற்றுவதில் குழப்பங்களை ஏற்படுத்தி தொடர்ந்தும் அமைச்சுப் பதவிகளை தக்கவைத்துக்கொள்ளவே இவர்கள் முயற்சிக்கின்றனர்.
எனவே 19வது திருத்தம் கொண்டுவருவதற்கான இறுதி சந்தர்ப்பம் இதுவே, அதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி முறைமையினை நீக்குவதே எமது பிரதான நோக்கம் அதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ள நிலையில் அதனை தவறவிட்டுவிடக்கூடாது. 13வது திருத்தத்தின் முரண்பாடுகள் இருந்தும் மாகாணசபை அதிககாரங்கள் பலப்படுத்தப்பட்டதன் காரணத்திலையே அதை பாதுகாக்க முடிந்தது. அதேபோல் தான் 19வது திருத்தம் கொண்டுவந்தால் தான் ஜனாதிபதிக்கான சர்வதிகாரத்தினை கட்டுபடுத்த முடியும்.
ஆனால் 19வது திருத்தம் கொண்டுவருவதை தடுக்க பல சூழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. யார் என்ன சொன்னாலும் இறுதி முடிவு ஜனாதிபதியின் கைகளில் தான் உள்ளது. அவர் வாக்குக் கொடுத்ததை செய்து காட்டவேண்டும். எனவே இப்போது மைத்திரிபால சிறிசேனவின் கருத்து மிகவும் முக்கியமானது. மக்களின் முன்னிலையின் அவர் தெரிவிக்க வேண்டும். அது தவிர்ந்து கடந்த காலங்களில் ஏனைய ஜனாதிபதிகள் போல் மைத்திரிபால சிறிசேனவும் மாறிவிடக் கூடாது எவை 9ம் திகதி முதல் உரை அவருடையதாக இருக்க வேண்டும். அதில் 19வது நிறைவேற்ற தீர்மானங்கள் முன்வைக்க வேண்டும். யார் எதிர்த்தாலும் எதிர்வரும் 10ம் திகதி 19வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments