திறைசேரி உண்டியலின் மூலம் மேலதிக நிதி கோரும் தீர்மானம் தோல்வியடைந்தமையினால் அரசாங்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நாம் அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி முற்கொடுப்பனவு, சம்பளம் ஆகியவற்றை பெற்றுக்கொடுப்போம். மக்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
எனினும் மேலதிகமாக நாம் மக்களுக்கு வழங்கவிருந்த நிவாரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்படும் விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினரே பொறுப்பு கூற வேண்டும்.
இதன் காரணமாக பாராளுமன்றத்தை ் கலைக்க வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் அரசிற்கு கிடையாது. ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படதானே போகிறது. என அமைச்சர் சுட்டகாட்டினார்.
திறைசேரி உண்டியலில் மூலம் மேலதிக நிதி கோரும் தீர்மானம் தோல்வியடைந்தமை தொடர்பில் தௌிவுபடுத்தும் வகையில் நேற்று இரவு நிதி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டிற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இபொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
இது தொடர்பில் நிதி அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அரச ஊழியர்களுக்கு சம்பளம் பெற்றுக்கொடுத்தல் இ இசமூரத்தி கொடுப்பனவு பெறும் அப்பாவி மக்களுக்கு சலுகைகளை பெற்று கொடுக்கும் நோக்குடன் திறைசேரியிலிருந்து மேலதிகமாக 400 பில்லியன் ரூபாவினை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம் செய்தது. எனினும் குறித்த தீரமானம் அவசியமில்லை என்று கருதிய போதும் மக்களுக்கு மேலதிகமாக நிவாரணங்களை வழங்கும் வகையில் குறித்த தீர்மானம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.
எனினும் குறித்த தீர்மானத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்குவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் அதற்கு எதிர்மாறாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாக செயற்படும் விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினர் குறித்த நதி கோரல் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விடுமாறு கோரியிருந்தனர்.
இந்த தீர்மானம் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என்பது தெட்டத்தௌிவாகியுள்ளது. சுமார் 10 வருடமாக நாட்டை சீரழத்தவர்கள் தற்போது மேலதிகமாக மக்களுக்கு வழங்கவிருந்த சலுகைகள் இடைநிறுத்தியுள்ளனர். எனவே இதற்கு விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினரே பொறுப்பு கூற வேண்டும்.
ஆகவே சமூர்த்தி கொடுப்பனவு பெறுபவர்கள்இ விவசாயிகள் மற்றும் அரச ஊழியர்களுக்கு கிடைக்கவிருந்த மேலதிக சலுகைகளை இடைநிறுத்தியுள்ளனர். எனவே எதிர்க்கட்சியின் குறித்த செயற்பாட்டிற்கு மக்கள் உரிய பதிலை வழங்க வேண்டும்.
முன்னைய ஆட்சியின் போது மக்கள் மீது சுமத்தப்பட்ட கடன் சுமையை குறைக்கும் நோக்குடனே நாம் இந்த முயற்சியை நாம் முன்னெடுத்தோம். எனினும் அதனை எதிர்க்கட்சியினர் அர்த்தமற்றதாக்கிவிட்டனர்.
குறித்த தீர்மானம் தோல்வி அடைந்தமையினால் நாம் அச்சம் கொள்ளவில்லை. எம்மை பயமுறுத்தவும் முடியாது. இதன் காரணமாக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டிய தேவையும் கிடையாது. எவ்வாறாயினும் ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை நீக்கி, தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட்டதன் பின்பு ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படதானே போகிறது.
நாட்டை சீரழித்தது போதாதென்று மறுபடியும் இதற்கான முயற்சியை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை செலுத்த எம்மால் முடியாமல் போகும். ஆயினும் குறித்த தீர்மானத்தை மீளவும் பாராளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்றுவோம்.
எனினும் 2015 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவு திட்டத்தினூடாக திட்டமிட்டதன் பிரகாரம் அனைத்து சலுகைகளையும் வழங்கியே தீருவோம். எவரும் இது தொடர்பில் அஞ்ச வேண்டியதில்லை என்றார்.
திறைசேறியிலிருந்து மேலதிகமாக நிதி பெறும் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் செயற்பட்ட விதம் பின்புற்த்தால் கத்தியால் குத்தும் செயற்படாகும் .எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா இ தினேஷ் குணவர்தன ஆகியோர் குறித்த தீர்மானத்திற்கு முழுமையாக ஆதரவு வழங்குவதாக கூறிவிட்டு இவ்வராறன கீழ் தரமான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
எனினும் 175 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எமக்கு உள்ளது என்றார்.
0 Comments