Subscribe Us

header ads

15000த்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை


குற்றச் செயல்களில் ஈடுபட்ட 15000த்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் இறுதி வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் ஆணையாளர் ரூமி மர்சூக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 
உரிய தரத்தில் பொருட்களை விற்பனை செய்யாமை, மோசடிகளில் ஈடுபட்டமை, கலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வர்த்தகர்கள் சுற்றி வளைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் மிகவும் நிதானத்துடன் இருக்க வேண்டுமென ரூமி மர்சூக் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments